மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள Junior Officer Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 63 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.37 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய கனிம மேம்பாட்டு கழகம் (NMDC)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 63
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- Junior Officer (Mining) Trainee - 28
- Junior Officer (Mechanical) Trainee - 17
- Junior Officer (Electrical) Trainee - 13
- Junior Officer (Civil) Trainee - 05
கல்வித் தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.37,000 முதல் ரூ.1,30,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nmdcjo.formflix.com/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 03.03.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்களில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் Supervisory Skill Test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nmdc.co.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












