மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 85 பயிற்சியுடன் கூடிய பணியாளர்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 85
பணிகள் :-
- பிட்டர், வெல்டர் மற்றும் எலக்ட்ரீசியன் பணியிடங்களுக்கு தலா 20 பணியிடங்கள் உள்ளன.
- MLT. Pathology fresher பணிக்கு காலிப் பணியிடங்கள் உள்ளது.
- MLT. Radiology fresher 10 பணியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு:-
01.06.2019 அன்று 14 வயது பூர்த்தி அடைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி:-
10-வது, 12-வது தேர்ச்சிபெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.nlcindia.com/new_website/careers/ADVERTISE-02-2019.pdf என்னும் லிங்க்கை காணவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nlcindia.com என்னும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : பொதுமேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி-607803.
விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசி நாள் : ஆகஸ்ட் 12, 2019 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இந்தப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் என்.எல்.சி. இணையதளத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகும்.


Click it and Unblock the Notifications












