நவ ரத்னா அந்தஸ்து பெற்ற, 'என்.எல்.சி., என்றழைக்கப்படும் 'நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள 500 தொழில்முறை பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் ஜூலை 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நிர்வாகம் : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (Neyveli Lignite Corporation India Limited)
மேலாண்மை : மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.07.2023
பணியிடம்: நெய்வேலி, கடலுார் மாவட்டம், தமிழ்நாடு

பணி விவரம்
Ø Industrial Trainee
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில், ஐ.ஐ.டி., பிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், வெல்டிங், எம்.எம்.வி, டீசல் மெக்கானிக், டிராக்டர் மெக்கானிக், சிவில் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த கூடுதல் விபரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 01.06.2023 தேதியின் படி 37க்குள் இருக்க
வேண்டும். வயது வரம்பில் வழங்கப்பட்ட தளர்வுகள் குறித்த விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம் விவரம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில்,உதவித் தொகை வழங்கப்படும்.
Industrial Trainee [Specialised Mining Equipment (SME) Operations]
ü 1st year : ரூ.18,000/-
ü 2nd year : ரூ.20,000/-
ü 3rd year: ரூ.22,000/-
Industrial Trainee (Mines & Mines Support Services)
ü 1st year : ரூ.14,000/-
ü 2nd year : ரூ.16,000/-
ü 3rd year: ரூ.18,000/-
தேர்வு முறை
இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவர்.
நோட் இட் ப்ளீஸ்...!
பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முகவரிக்கு கோரப்பட்ட சான்றிதழ்களுடன் பிழையின்றி பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
மறக்காதீங்க... 08.07.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
முதலில் www.nlcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்ல
வேண்டும்.
"Careers", Engagement of PAPs of Neyveli Units as Industrial
Trainees என்ற பகுதியில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
https://web.nlcindia.in/pap_training/ பகுதியை கிளிக் செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவின்போது, அதில் கோரப்படும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின், அதை எதிர்கால தேவைக்கு பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.
க்ளிக் ப்ளீஸ்....!.
https://www.nlcindia.in/new_website/index.htm
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.nlcindia.in/new_website/careers/02-2023-pap.pdf


Click it and Unblock the Notifications












