இளைஞர்களே...தேசிய வைராலஜி நிறுவனத்தில் பணிபுரிய ஓடிவாங்க....!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்(ஐ.சி.எம்.ஆர்) அமைப்பின் கீழ் செயல்படும் தேசிய வைராலஜி நிறுவனத்தில் (என்.ஐ.வி.,) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு niv.recruitlive.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம் அல்லது தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ('National Institute of Virology - NIV ) மகாராஷ்டிர மாநிலம் புணே மாநகரத்தில் அமைந்துள்ள்து. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் (ஐசிஎம்ஆர்) ஒரு பகுதியாக இந்நிறுவனம் 1952 முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இளைஞர்களே...தேசிய வைராலஜி நிறுவனத்தில் பணிபுரிய ஓடிவாங்க....!!!

இந்நிறுவனம் துவக்கத்தில் ராக்பெல்லர் அறக்கட்டளையுடன் இணைந்து இயங்கிய போது இதன் பழைய பெயர் 'வைரஸ் ஆய்வு மையம் (Virus Research Center) என்று இருந்தது. தற்போது உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இயங்கும், இந்த தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனத்துக்கு, உலக சுகாதார நிறுவனம் எச்-5 (H5) தகுதியை வழங்கியுள்ளது.

இந்நிறுவனம் வைரஸ் கிருமிகளை ஆய்வு செய்வதுடன், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளையும், விளைவுகளையும் கண்டறிவதுடன், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளையும் ஆய்வு செய்து கண்டுபிடிப்பதில் முனைப்புடன் உள்ள்து.

1978-இல் இதன் பெயர் தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம் என்று மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் இந்த ஆய்வு நிறுவனம் இன்ஃப்ளூயன்ஸா (குளிர் காய்ச்சல்), சிறுமூளை அழற்சி (ஜப்பானிய என்செபாலிடிஸ்), ரோட்டா வைரஸ், தட்டம்மை, மஞ்சள் காமாலை மற்றும் கொரானா வைரஸ் ஆகியவற்றிற்றிகான தேசிய கண்காணிப்பு மையமாகவும் செயல்படுகிறது.

மேலும் இந்த ஆய்வு நிறுவவனம் புணே பல்கலைக்கழகம் வாயிலாக வைரஸ் கிருமிகள் படிப்புகளில் முதுநிலை அறிவியல் பட்டப் படிப்பும், முனைவர் படிப்பும் வழங்குகிறது.

இந்த ஆராய்ச்சி மையம் சுவாசச் செல்கள், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி, ரிக்கெட்ஸியா, மஞ்சள் காமாலை, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் வைரஸ்கள் தொடர்பான கிளினிக்கல் தீநுண்மியியல், உயிர்வேதியில், வைரஸ் பதிவுகள் மற்றும் உயிர் அளவையியல் போன்றவைகளில் ஆய்வுப் படிப்புகள் கொண்டுள்ள்து. இந்திய அறிவியல் ஆலோசனைக் குழுவின் (Scientific Advisory Committee -SAC) இணைந்து இம்மையம் தனது ஆய்வுப் பணிகள் மேற்கொள்கிறது

இந்த சிறப்பு மிகு தேசிய வைராலஜி நிறுவனத்தில்தான் தற்போது காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இங்கு டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 49, டெக்னீசியன் 31 என மொத்தம் 80 பணியிடங்களை விரைவில் நிரப்பவுள்ளனர்.

இந்தப் பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி என மாறுபடுகிறது.
இந்தப் பணியிடங்களுக்கு வயதுத்தகுதியாக டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவுக்கு 30-ம், டெக்னீசியன் பிரிவுக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு தேர்ச்சி முறையாக ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய முறைகள் பின்பற்றப்படும்.

ஆன்-லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ. 300 செலுத்தவேண்டும். மேலும் மகளிர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசிநாள் டிசம்பர் 10-ம் தேதியாகும்(10.12.2023)

விண்ணப்பங்களை டவுன்லோடு செய்தல், பதிவேற்றுதல் போன்ற கூடுதல் விவரங்களுக்கு niv.recruitlive.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICMR NIV Recruitment Application Form has been started for 80 positions. Eligible candidates can apply till 10 December 2023 through the official website. Online applications are now being accepted, and the ICMR NIV Notification has been made public. Candidates who meet the eligibility requirements can apply online at https://niv.icmr.org.in/ or https://niv.recruitlive.in/ for the ICMR NIV Recruitment 2023.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+