தேசிய வைராலஜி நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு...!!!

ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் கீழ் செயல்படும் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் (ICMR -National Institute of Virology -NIV) புராஜக்ட் டெக்னிக்கல் சப்போப்ர்ட் (Project Technical Support-II) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பான புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

டுதல் விவரங்களுக்கு https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/NIV_BU_Recruitment_of_06_Project_Posts_Advertisement_Website2024.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம் என்று அழைக்கப்படும் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ('National Institute of Virology - NIV ) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாநகரத்தில் அமைந்துள்ள்து. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் ஒரு பகுதியாக இந்நிறுவனம் 1952 முதல் செயல்படுகிறது.

ந்நிறுவனம் துவக்கத்தில் ராக்பெல்லர் அறக்கட்டளையுடன் இணைந்து இயங்கிய போது இதன் பழைய பெயர் 'வைரஸ் ஆய்வு மையம் ('Virus Research Center') என்பதாகும். தற்போது உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இயங்கும், இந்த தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனத்திற்கு, உலக சுகாதார நிறுவனம் H5 தகுதியை வழங்கியுள்ளது.

இந்நிறுவனம் வைரஸ் கிருமிகளை ஆய்வு செய்வதுடன், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளையும், விளைவுகளையும் கண்டறிவதுடன், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளையும் ஆய்வு செய்து கண்டுபிடிப்பதில் முனைப்புடன் உள்ள்து. 1978-இல் இதன் பெயர் தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தேசிய வைராலஜி நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு...!!!

மேலும் இந்த ஆய்வு நிறுவனம் இன்ஃப்ளூயன்ஸா (குளிர் காய்ச்சல்), சிறுமூளை அழற்சி (ஜப்பானிய என்செபாலிடிஸ்), ரோட்டா வைரசு, தட்டம்மை, மஞ்சள் காமாலை மற்றும் கொரானா வைரஸ் ஆகியவற்றுக்கான தேசிய கண்காணிப்பு மையமாகவும் செயல்படுகிறது.

மேலும் இந்த ஆய்வு நிறுவவனம் புனே பல்கலைக்கழகம் வாயிலாக வைரஸ் கிருமிகள் படிப்புகளில் முதுநிலை அறிவியல் பட்டப் படிப்பும், முனைவர் படிப்பும் வழங்குகிறது.

இவ்வாராய்ச்சி மையம் சுவாசச் செல்கள், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி, ரிக்கெட்ஸியா, மஞ்சள் காமாலை, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் வைரஸ்கள் தொடர்பான கிளினிக்கல் தீநுண்மியியல், உயிர்வேதியில், வைரஸ் பதிவுகள் மற்றும் உயிர் அளவையியல் போன்றவைகளில் ஆய்வுப் படிப்புகள் கொண்டுள்ள்து. இந்திய அறிவியல் ஆலோசனைக் குழுவின் (Scientific Advisory Committee (SAC) ஒன்றிப்புடன் இம்மையம் தனது ஆய்வுப் பணிகள் மேற்கொள்கிறது

இந்த பெருமைவாய்ந்த தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டில்தான் (ICMR -National Institute of Virology -NIV) தற்போது புராஜக்ட் டெக்னிக்கல் சப்போப்ர்ட் (Project Technical Support-II) பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணிக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புராஜக்ட் டெக்னிக்கல் சப்போப்ர்ட் (Project Technical Support-II) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma (MLT/DMLT/ITI) / Degree / PG தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புராஜக்ட் டெக்னிக்கல் சப்போப்ர்ட் (Project Technical Support-II) பணியிடங்களுக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

புராஜக்ட் டெக்னிக்கல் சப்போப்ர்ட் (Project Technical Support-II) பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.28,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 29.1.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/NIV_BU_Recruitment_of_06_Project_Posts_Advertisement_Website2024.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICMR-National Institute of Virology) NIV has officially declared the Project Technical Support vacancies in the Bangalore location. Candidates who hold their Intermediate (10+2) or B.Sc or M.SC or DMLT or Diploma can be eligible for ICMR NIV Recruitment 2024. Eligible candidates can apply online for Project Technical Support II vacancies before the last date of application.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+