நாட்டின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுதான் நிதி ஆயோக். இந்த கொள்கைக் குழுவானது 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்பட துவங்கியுள்ளது. இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார். இந்த அமைப்பில் காலியாக உள்ள கண்டுபிடிப்பு தலைவர், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுத் தலைவர், இளம் தொழில்முறை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நிதி ஆயோக்
மொத்த காலிப் பணியிடங்கள் : 82
பணி மற்றும் பணியிட விபரம்:-
- Innovation Lead : 12
- Monitoring & Evaluation Head : 10
ஊதியம் : மாதம் ரூ.80,000 முதல் ரூ.1,45,000 வரையில்
வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அறிவியல், தொழில்நுட்பம், கணினி, பொருளாதாரம், புள்ளியியல், கணிதம், வணிகவியல், மேலாண்மை, சட்டம், தொடர்பியல், இதழியல் போன்ற ஏதேனும் ஓர் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது பிஇ, பி.டெக் அல்லது சிஏ, சிஎஸ்ஐ, ஐசிடபுள்யூஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி : Young Professional
காலிப் பணியிடங்கள் : 60
ஊதியம் : மாதம் ரூ.60,000
வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பிஇ, பி.டெக் அல்லது மேலாண்மைத் துறையில் 2 வருட முதுகலை டிப்ளமோ அல்லது எம்பிபிஎஸ் அல்லது எல்எல்பி அல்லது சிஏ, ஐசிடபுள்யூஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
- www.niti.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 02.06.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.niti.gov.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












