மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய திறந்தவெளிப் பள்ளியில் காலியாக உள்ள இயக்குநர், கல்வி அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு ரூ.2.15 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய திறந்தவெளிப் பள்ளி
மொத்த காலிப் பணியிடம் : 86
பணி மற்றும் பணியிட விபரம்:-
பணி : இயக்குனர் (மதிப்பீடு) - 01
ஊதியம் : மாதம் ரூ.1,23,100 முதல் ரூ. 2,15,900 வரையில்
பணி : கல்வி அலுவலர் - 11
வயதுவரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
கல்வித் தகுதி :
- காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் கணினி திறன் அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்.
பணி : இடிபி மேற்பார்வையாளர் - 37
ஊதியம் : மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்
வயது வரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி : இளநிலை உதவியாளர் - 37
ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரையில்
வயது வரம்பு : 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
- 12ம் வகுப்பி தேர்ச்சியுடன் 6 ஆயிரம் வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.nios.ac.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 17.05.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://www.nios.ac.in/media/documents/vacancy/qualification_for_various_post.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












