மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் (NIMHANS) காலியாக உள்ள மூத்த ஆராய்ச்சி அதிகாரி, கம்ப்யூட்டர் புரோகிராமர், செவிலியர் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 275 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (NIMHANS)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Senior Scientific Officer, Computer Programmer, Junior Scientific Officer, Nursing Officer, Speech Therapist and Audiologist, Senior Scientific Assistant, Teacher for MR Children மற்றும் Assistant Dietitian என மொத்தம் 275 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 275
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு பி.எஸ்சி, பிஎச்.டி, முதுநிப் பட்டம், கணினி அறிவியல் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
Senior Scientific Officer பணிக்கு 40 வயதிற்கு உட்பட்டும், JSO, SSA மற்றும் Nursing Officer பணிக்கு 35 வயதிற்கு உட்பட்டும் இதர பணிகளுக்கு விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.35,400 முதல் அதிகபட்சம் ரூ.2,08,700 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் :
- Group A பணிகள் - பொது விண்ணப்பதாரர்கள் ரூ.2360/- || SC/ ST - ரூ.1180
- Group B பணிகள் - பொது விண்ணப்பதாரர்கள் ரூ.1180/- || SC/ ST - ரூ.885
- பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்க கட்டணம் இல்லை
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nimhans.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












