மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபுட் டெக்னாலஜி என்ட்டர்பிரனர்சிப் அன்ட் மேனேஜ்மென்ட் (NIFTEM) நிறுவனத்தில் காலியாக உள்ள Team Leader, Consultant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பணியிடங்கள்ள உள்ள நிலையில் இதற்கு ரூ.1.75 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : National Institute of Food Technology Entrepreneurship and Management (NIFTEM)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Team Leader, Consultant (for preparation of course material, DPR etc. for the entire training), Consultant (Media) and others
மொத்த காலிப் பணியிடம் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBA அல்லது சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.1.10,000 முதல் ரூ.1.75,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://niftem.ac.in/newsite/?page_id=849 என்ற இணையதளம் மூலம் 11.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://niftem.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.