தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள Sr. Resource Person, Resource Person, Chief Resource Person, Jr. Resource Person உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையம் (NIELIT)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Sr. Resource Person, Resource Person, Chief Resource Person, Jr. Resource Person
மொத்த காலிப் பணியிடங்கள் : 05
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Computer Science, Computer Engg, IT, Electronics, Multimedia, Accounts பிரிவுகளில் MCA/ DOEACC B Level/ B.E./ B.Tech/ M.Sc/ BCA/ DOEACC IT-A Level /PGDCA/ M.Tech/ M.E/ Graduate/ B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட துறையில் 4 ஆண்டுகள் வரையில் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.22,000 முதல் அதிகபட்சம் ரூ.30,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nielit.gov.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : National Institute of Electronics and Information Technology, Delhi Centre - 2nd Floor, Parsvnath Metro Mall, Inderlok Metro Station, Inderlok, Delhi-110052
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 26.10.2021 முதல் 29.10.2021 அன்று வரை இந்த நேர்காணல் நடத்தப்படவுள்ளது.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nielit.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












