தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.63 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையம் (NIELIT)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Staff-Car Driver
மொத்த காலிப் பணியிடங்கள் : 12
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், மோட்டார் வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்று, குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.63,200 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nielit.gov.in அல்லது https://register-delhi.nielit.gov.in/ எனும் இணைய முகவரியின் வாயிலாக 14.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300
- எஸ்.சி, எஸ்டி, பெண், முன்னாள் இராணுவ விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் தகுதித் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nielit.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












