தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள Scientist 'C' and Scientist 'D' பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 33 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பதவிக்கு ரூ.2.10 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையம் (NIELIT)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Scientist 'C' and Scientist 'D'
மொத்த காலிப் பணியிடங்கள் : 33
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களில் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் துறையில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அவற்றுடன் Research மற்றும் Development பணிகளில் 4 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 35 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.67,700 முதல் ரூ.2,09,200 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruitment-delhi.nielit.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் 07.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800
- எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Screening Test, Personal Interaction, Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nielit.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












