மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி நிறுவனத்தில் காலியாக உள்ள டெட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.17 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ண்பபிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (NIE)
பணி : Project Data Entry Operator (Grade A)
மொத்த காலிப் பணியிடங்கள் : 11
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 25 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி :-
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.17,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://nie.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 19.03.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
தேர்வு நடைபெறும் தேதி : 19.03.2021
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nie.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












