டிசைனிங் படிக்க ஆசையா..அழைக்கிறது என்ஐடி…!

என்ஐடி என்று பரவலாக அழைக்கப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் (NID) உயர்கல்வி நிறுவனம், டிசைனிங் ஆர்வமுள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது.

நாட்டிலுள்ள மிக முக்கிய கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கிறது இந்த என்ஐடி. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் உயர்கல்வி நிறுவனம் தற்போது 2-24-25-ம் கல்வியாண்டுக்கான பல்வேறு படிப்புகளை வழங்கவுள்ளது.

2024-25ம் கல்வி ஆண்டில் சேர்க்கை பெற தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்கள் இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம்.

என்ஐடி கல்வி நிறுவன வளாகங்கள் அகமதாபாத், காந்திநகர், ஆந்திரபிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம், பெங்களூரு, அசாம் நகரங்களில் அமைந்துள்ளது. இந்த உயர்கல்வி நிறுவனத்தின் தலைமை இடமாக அகமதாபாத் கல்வி வளாகம் அமைந்துள்ளது.

டிசைனிங் படிக்க ஆசையா..அழைக்கிறது என்ஐடி…!

இங்கு இளநிலை பட்டப்படிப்பு: பி.டெஸ்., - பேச்சுலர் ஆப் டிசைன்(4 ஆண்டுகள்) வழங்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் கம்யூனிகேஷன் டிசைனில் - பிலிம் அண்டு வீடியோ கம்யூனிகேஷன், எக்சிபிஷன் டிசைன், அனிமேஷன் டிசைன், கிராபிக் டிசைன் பிரிவுகளும்,
இண்டஸ்டிரியல் டிசைனில், செராமிக் அண்டு கிளாஸ் டிசைன், பர்னிச்சர் அண்டு இண்டீரியர் டிசைன், புராடெக்ட் டிசைன் பிரிவுகளும், டெக்ஸ்டைல் டிசைனில், டெஸ்டைல், அப்பேரல், லைப்ஸ்டைல் அண்டு ஆக்சஷரி டிசைன் பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு 2003, ஜூலை 1-ம் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருத்தல் அவசியம். எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி., மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வை கல்வி நிறுவனம் வழங்குகிறது.

மேலும், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தின் கீழ் 2023-24ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பை நிறைவு செய்பவராக இருக்க வேண்டும். மேலும், அறிவியல், கலை, வணிகவியல், சமூகவியல் என அனைத்து பிரிவினரும் விண்ணப்பிக்க முடியும்.

மேலும், இங்கு முதுநிலை பட்டப்படிப்பு, எம்.டெஸ்., - மாஸ்டர் ஆப் டிசைன் உயர்கல்வியும் வழங்கப்படுகிறது.

இதில் சேர்வதற்கு 1992, ஜூலை 1-ம் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருத்தல் அவசியமாகும்.மேலும், எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி., மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வயது வரம்பில் தளர்வை இந்த உயர்கல்வி நிறுவனம் வழங்குகிறது.

மேலும், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இந்திய கல்வி நிறுவனத்தில் 3 அல்லது 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு அல்லது குறிப்பிட்ட பிரிவுகளில் 4 ஆண்டு டிப்ளமோ படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். தற்போது இளநிலை படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

டி.ஏ.டி., - டிசைன் ஆப்டிடியூட் டெஸ்ட் பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் ஆகிய தேர்வுகளின் வாயிலாக தகுதியான மாணவ, மாணவிகள் இந்த படிப்புகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்தப் படிப்புகளுக்கு https://admissions.nid.edu/ என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தல் அவசியமாகும்.
இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 1, 2023 கடைசி நாளாகும்.

இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.nid.edu என்ற இணையதளத்தை மாணவர்கள் தொடர்பு கொண்டு அறிய முடியும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NID invites applications from students. Admissions 2024-25 for B.Des. & M.Des. is now OPEN. Last Date for submitting online application (without late fee) is upto: 1600 hrs. Friday, 01 December 2023.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+