தேசிய புலனாய்வு முகமையில் காலியாக உள்ள மூத்த அரசு வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர், துணை சட்ட ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 03 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய புலனாய்வு முகமை (NIA)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
- Senior Public Prosecutor - 01
- Public Prosecutor - 01
- Deputy Legal Advisor - 01
கல்வித் தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பணியிடத்திற்கு தொடர்புடைய பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு, மேற்கண்ட பணிக்கு ஏற்ற துறையில் பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Senior Public Prosecutor - ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரையில்
- Public Prosecutor - ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
- Deputy Legal Advisor - ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nia.gov.in/recruitment-notice.htm எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து, அதனை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, New Delhi- 110003
விண்ணப்பிக் வேண்டிய கடைசி நாள் : 28.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nia.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.