என்எச்எஸ்ஆர்சிஎல் நிறுவனம் என்று அழைக்கப்படும் நேஷனல் ஹை ஸ்பீட் ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) நிறுவனத்தில் சீனியர் மேனேஜர், மேனேஜர் (Senior Manager, Manager ) பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.2,00,000/- மாத சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலும், தகுதியும் உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) இந்தியாவில் அதிவேக ரயில் பாதையை நிர்வகிக்க 2016-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய ரயில்வே, ரயில்வே அமைச்சகம், மத்திய அரசின் முழுச் சொந்தமான துணை நிறுவனமாகும்.

NHSRCL என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் நிறுவனங்கள் சட்டம், 2013-ன் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம் இந்தியாவில் அதிவேக ரயில் திட்டங்களை மேம்படுத்துவதும் செயல்படுத்துவதும் ஆகும். ரயில்வே அமைச்சகம், இந்திய அரசு மற்றும் இரண்டு மாநில அரசுகள் - குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவற்றின் பங்குடன் உருவாக்கப்பட்டதாகும்.
4,500 பணியாளர்களை கொண்ட இந்த நிறுவனம் டெல்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த என்எச்எஸ்ஆர்சிஎல் (NHSRCL) நிறுவனத்தில்தான் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளன.
சீனியர் மேனேஜர் பிரிவில் 2 , மேனேஜர் பிரிவில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
சீனியர் மேனேஜர், மேனேஜர் பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக Civil Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, Diploma பட்டத்தை அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள், ரயில்வே நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
30.11.2023 அன்றைய தினத்தின் படி, 45 வயதுக்கு கீழுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
சீனியர் மேனேஜர் பணிக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்றும், மேனேஜர்r பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு (Written Exam, Interview, Medical Exam) என்னும் தேர்வு முறைகளின் மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.
எஸ்சி, எஸ்டி, மகளிர் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்தால் அவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம்.
யுஆர், இடபிள்யூஎஸ், ஓபிசி பிரிவினர் ரூ.400/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த NHSRCL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 7-ம் தேதிக்குள் (07.12.2023) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இதுதொடர்பான பணியிடவாய்ப்பு அறிவிப்பை https://nhsrcl.in/sites/default/files/notice/2023-11/06,07-2023 - Vacancy Notice SM, Mgr (Contract)_0.pdf என்ற இணையதள லிங்க் மூலம் காணலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://nhsrcl.in/en/career/vacancy-notice என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












