தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் எனப்படும் NHSRC நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர், மூத்த ஆலோசகர், இளநிலை ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.1.50 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் (NHSRC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Junior Consultant, Consultant மற்றும் Senior Consultant உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBBS, MD, முதுநிலைப் பட்டம், இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இப்பணிகளில் 07ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- Junior Consultant - 35 வயது
- Consultant மற்றும் Senior Consultant - 45 வயது
- Consultant - 50 வயது
- Senior Consultant - 55 வயது
ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.1,50,000 மாதம் ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் Consultant-Administration பணிக்கு வரும் 06.11.2021 அன்றுக்குள்ளும், இதர பணிகளுக்கு 09.11.2021 அன்றுக்குள்ளும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்ப முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nhsrcindia.org/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












