மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (NHFDC) காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.60 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, எம்பிஏ துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NHFDC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மேலாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர் அறிவியல், வனிகவியல் துறையில் முதுநிலைப் பட்டம், பி.இ, எம்பிஏ அல்லது CA/ICWA/MBA (Finance) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Project Formulation பதவியில் 3 வருடம் அல்லது Appraisal Scrutiny of Projectsயில் Executive Level-யில் 2 வருடம் அல்லது Poject Appraisal, Monitoring and Recovery பிரிவில் ஒரு வருடம் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
National Handicapped Finance and Development Corporation (Dept. of Empowerment of PwDs (Divyangjan), Ministry of SJ&E, Government of India) Unit No.11&12, Ground Floor, DLF Prime Tower, F-79-80, Okhla Phase-I, New Delhi - 110020.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500, demand draft மூலம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்www.nhfdc.nic.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












