தேசிய தோட்டக்கலை வாரியத்தில் சீனியர் தோட்டக்கலை அதிகாரி (Senior Horticulture Officer -Group B) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://nhbrec.ntaonline.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
தேசிய தோட்டக்கலை வாரியம் (National Horticulture Board) என்பது மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற ஓர் மிகச்சிறந்த அமைப்பாகும். தோட்டக்கலையை ஊக்குவிப்பதற்கும், விவசாயிகளுக்கு உதவவும், இந்தியாவில் பயிர் உற்பத்தி மற்றும் லாபத்தை அதிகரிக்கவும் இவ்வமைப்பு உதவுகிறது.
தேசிய தோட்டக்கலை வாரியம் சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860-ம் ஆண்டின் கீழ் ஒரு தன்னாட்சி சமூகமாக 1984-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்தியாவின் விவசாயத்தில் தோட்டக்கலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் தோட்டக்கலை மேம்பாடு, பரவலான உற்பத்தி, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் இவ்வமைப்பு நிறுவப்பட்டது.
இதன் முக்கிய நோக்கங்களாக உயர் தரமான தோட்டக்கலை நிலங்களை உருவாக்குவது,
புதிய தோட்டக்கலைப் பொருட்களின் ஊக்குவிப்பு மற்றும் சந்தை வளர்ச்சி,தோட்டக்கலை உற்பத்தி மற்றும் பொருட்களின் நுகர்வை ஊக்குவித்தல், வேளாண் பயிற்சிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த அறிவுரை வழங்குதல் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்புவாய்ந்த தேசிய தோட்டக்கலை வாரியத்தில்தான் தற்போது சீனியர் தோட்டக்கலை அதிகாரி (Senior Horticulture Officer -Group B) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என தற்போது 25 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப 16.12.2023 முதல் 05.01.2024 வரை இணையதளம் செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனியர் தோட்டக்கலை அதிகாரி (Senior Horticulture Officer -Group B) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து வேளாண், தோட்டக்கலை, உணவு தொழில்நுட்பம், அறுவடை தொழில்நுட்பம், வேளாண் பொருளாதாரம், வேளாண் பொறியியல், வேளாண் அறிவியல் (Graduate in Agriculture/ Horticulture/ Food Technology/Post-harvest Technology/ Agriculture Economics/ Agriculture Engineering /Food Sciences from a recognized University preferably Master Degree) பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சீனியர் தோட்டக்கலை அதிகாரி (Senior Horticulture Officer -Group B) பணியிடங்களுக்கான வயது வரம்பு:
5.1.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு, வயதுச்சலுகை குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சீனியர் தோட்டக்கலை அதிகாரி (Senior Horticulture Officer -Group B) பணியிடங்களுக்கான சம்பள விவரம்:
இந்த சீனியர் தோட்டக்கலை அதிகாரி (Senior Horticulture Officer -Group B) பணியிடங்களுக்கான பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.35400 முதல் 112400 வரை சம்பளம் வழங்கப்படும்.
சீனியர் தோட்டக்கலை அதிகாரி (Senior Horticulture Officer -Group B) பணியிடங்களுக்கான தேர்வு செயல் முறை:
ஸ்டேஜ்-1 (எம்சிகியூ டைப்), ஸ்டேஜ்-2 (டிஸ்கிரிப்டிவ் டைப்), சான்றிதழ் சரிபார்ப்பு (Stage-I (MCQ Type) & Stage-II (Descriptive Type), Certificate Verification) ஆகிய முறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக பொதுப்பிரிவு, ஓபிசி, இடபிள்யூஎஸ் (General/ OBC/EWS)- ரூ.1000/- செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி (SC/ST) பிரிவினர் ரூ.500/- செலுத்திநால் போதுமானது.
பிடபிள்யூடி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் 16.12.2023 முதல் https://exams.nta.ac.in/NHB/ தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் உள்ள NHB இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் 5.1.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தொடர்பான தகவல்களுக்கு
https://exams.nta.ac.in/NHB/images/information-bulletin-sr-horticulture-officer.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க https://nhbrec.ntaonline.in/ என்ற முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












