இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் (NHAI) காலியாக உள்ள பொது மேலாளர், இணை பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. மொத்தம் 84 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.67 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 84
பணி : General Manager, General Manager (Technical)
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Civil Engineering தேர்ச்சி பெற்று implementation of Infrastructure பிரிவில் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலம் வேளைகளில் குறைந்தது 6 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
ஊதியம் :
- General Manager - ரூ.37,400 முதல் ரூ.67,000 மாதம்
- Deputy General Manager - ரூ.15,000 முதல் ரூ.39,100 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nhai.gov.in/#/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் 04.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhai.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












