இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் (NHAI) காலியாக உள்ள மூத்த பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.67 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
பணி : மூத்த பொது மேலாளர்
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Commerce/ Accounts/ Finance/ ICAI/ ICWAI பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும், நிதி, கணக்கு துறையில் 17 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.37,000 முதல் அதிகபட்சம் ரூ.67,000/மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nhai.gov.in/#/vacancies/current அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 16.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு இன்றி Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhai.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












