மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு பி.இ எலக்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிறுவனம் : தேசிய உரத்தொழிற்சாலை
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியர்
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : B.E Electronics and Instrumentation Engineering பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் 21-01-2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 21-01-2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.700
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nationalfertilizers.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.