நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு நடைபெற்று முடிந்த நிலையில் இன்று அல்லது ஓரிரு நாட்களில் அதற்கான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். பல பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்றன. இதனிடையே, நீட் தேர்விற்குத் தயாராகி வந்த மாணவர்களில் சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், மத்திய அரசு தொடர்ந்து தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டுத் தேர்வும் நடைபெற்று முடிந்தது.
பல்வேறு எதிர்ப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் இடையே கடந்த செப்டம்பர் 14ம் தேதியன்று நீட் தேர்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இத்தேர்விற்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்வு முடிவுகள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் ntaneet.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் தங்களுடைய பதிவெண் பயன்படுத்தி முடிவை அறிந்துகொள்ளலாம்.