மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பால் மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள நிர்வாக இயக்குநர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விவசாயம் மற்றும் அறிவியல் துறையில் பட்டமும், அனுபவமும் பெற்றவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : தேசிய பால் மேம்பாட்டு வாரியம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : நிர்வாக இயக்குநர்
தகுதி : விவசாயம், கால்நடை அறிவியல், அறிவியல், பொருளாதாரம், வர்த்தகம், பொறியியல் அல்லது தொடர்புடையத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம் : குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை
பணியிடம் : தேசிய பால் மேம்பாட்டு வாரியம், ஆனந்த் - 388 001, குஜராத்.
ஊதியம் :
- மாதம் ரூ. 2,05,400 முதல் ரூ.2,24,400 வரையில்
- இதர சலுகைகளும் வழங்கப்படும்
வயதுவரம்பு : 2018 டிசம்பர் 31ன்படி 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சுய விபரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 11.02.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.nddb.coop அல்லது http://careers.nddb.coop/SitePages/JobSeekerJobDetail.aspx?hash=sR4coaTT9xhbGEpo0H1kH704PIqZpCWlDYOAPxJNFLQ= என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












