10, 12-வது தேர்ச்சியா? மத்திய நிலக்கரி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL) நிறுவனமான நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Operator பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 307 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
10, 12-வது தேர்ச்சியா? மத்திய நிலக்கரி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 307

பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:

  • Dumper Operator - 184
  • Surface Miner Operator - 27
  • Pay Loader Operator - 09
  • Dragline Operator - 19
  • Grader Operator - 07
  • Shovel Operator - 19
  • Dozer Operator - 16
  • Crane Operator - 26

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், RTA / RTO ஆல் வழங்கப்பட்ட HMV License கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடங்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிடப்பட்டள்ள பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nclcil.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள rectt.ncl@coalindia.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Physical Attendance, Annual Confidential Report (ACR) மற்றும் Incentive earned in the preceding three years of superannuation உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nclcil.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NCL Recruitment 2022: Apply Online For various Operator Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X