மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் காலியாக உள்ள Site Inspector பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 120 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.31 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் (NBCC)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்தக் காலிப் பணியிடம் : 120
பணி: Site Inspector
கல்வித் தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பதாரர் குறைந்தது 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.31,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nbccindia.com எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 14.04.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : இப்பணியிடங்களுக்கு Computer Based Test (CBT) மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
- இதர விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nbccindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்ககை கிளிக் செய்யவும்.