ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக மாத சம்பளம் அழைக்கிறது என்பிசிசி இந்தியா நிறுவனம் ...!

என்பிசிசி இந்தியா (NBCC -இந்தியா) நிறுவனமானது இயக்குநர் -நிதி) (Director -Finance) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் இயக்குநர் பணியிடம் உட்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 28.12.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

என்பிசிசி (இந்தியா) லிமிடெட், முன்பு நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் என்று அழைக்கப்பட்டது, இது மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாக சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக மாத சம்பளம் அழைக்கிறது என்பிசிசி இந்தியா நிறுவனம் ...!

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தற்போதைய செயல்பாடுகள் மூன்று முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன; 1. திட்ட மேலாண்மை ஆலோசனை, அரசாங்க சொத்துக்களின் மறுமேம்பாடு, 2. பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம். 3 ரியல் எஸ்டேட் மேம்பாடு உட்பட பல்வேறு பணிகள்.

என்பிசிசி இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயலகம் டெல்லி நகரில் அமைந்துள்ளது. மேலும் இது இந்தியா முழுவதும் 31 பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் மற்றும் ஈராக், லிபியா, நேபாளம், மொரிஷியஸ், துருக்கி, போட்ஸ்வானா, மாலத்தீவுகள், ஏமன், ஓமன், யுஏஇ,] துபாய் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பிற நாடுகளிலும் இந்த நிறுவனம் கிளைகளையும், அலுவலகங்களையும் அமைத்துள்ளது.

இந்த அமைப்பு, அரசு சொத்துக்களை மீண்டும் மேம்படுத்துதல், சாலைகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள், அலுவலகங்கள், பாலங்கள் மற்றும் தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்புகள் போன்ற பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

என்பிசிசி நிறுவனமானது புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றம், பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜ்னா (PMGSY), திடக்கழிவு மேலாண்மை (SWM) மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் மேம்பாட்டுப் பணிகளுக்கான அடல் மிஷன் ஆகியவற்றின் கீழ் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏராளமான திட்டங்களை இந்த நிறுவனம் நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.
இந்த பெருமை மிகு நிறுவனத்தில்தான் தற்போது இயக்குநர்-நிதி உள்ளிட்ட பணியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள நபர்கள் வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

கல்வி தகுதியாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து a Chartered Accountant or Cost Accountant or a full time MBA/PGDM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 1,44,200-2,18,200/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பங்களை அனுப்ப இம்மாதம் 28-ம் தேதி (டிசம்பர் 28, 2023) கடைசி நாளாகும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://www.nbccindia.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NBCC Recruitment 2023: NBCC (India) Limited is inviting applications from suitable and qualified candidates for the position of Director (Finance). In accordance with the official notification of NBCC Recruitment 2023, the applicant’s tenure will be for 05 years, beginning with the day of starting and ending with the date of superannuation or until further orders, whichever comes first.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+