மத்திய அரசின் கீழ் மத்திய பழங்குடிகள் நல அமைச்சகத்திற்கு உட்பட்ட பழங்குடியின மாணவர்கள் கல்வி சங்கத்தில் காலியாக உள்ள தட்டச்சர் (கிரேடு 1) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தட்டச்சு திறன் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய பழங்குடியின மாணவர்கள் கல்வி சங்கம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Stenographer Grade - I
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்று, தட்டச்சு துறையில் சான்றிதழ் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 27 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.44,900 முதல் ரூ.1,42,400 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://tribal.nic.in/ என்ற இணையதளம் மூலம் 04.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tribal.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












