நேஷனல் அட்மாஸ்பெரிக் ரிசர்ச் லேபரட்டரி எனப்படும் (National Atmospheric Research Laboratory -NARL) தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வக நிறுவனத்தில் தற்போது ஜேஆர்எஃப், விஞ்ஞானி, இன்ஜினீயர் (எஸ்டி) (JRF, Scientist / Engineer -SD) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.narl.gov.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம் (National Atmospheric Research Laboratory NARL) என்பது இந்திய விண்வெளித் துறையிலிருந்து நிதி ஆதாரம் பெற்று தனித்து இயங்கக் கூடிய ஆராய்ச்சி நிறுவனமாகும்.
தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம்' வளிமண்டல அறிவியல் துறையிலுள்ள அடிப்படை மற்றும் இயற்பியல் பயன்முறை ஆய்வு, ஆராய்ச்சி போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகமாக" மறுபெயரிடப்பட்டது.
இத்தகைய பெருமை வாய்ந்த என்ஏஆர்எல் நிறுவனத்தில் தான் தற்போது ஜேஆர்எஃப், விஞ்ஞானி, இன்ஜினீயர் (எஸ்டி) (JRF, Scientist / Engineer -SD) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:
இந்த என்ஏஆர்எல் நிறுவன பணியிடங்ளுக்கு அரசு அல்லது அரசு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பட்டமேற்படிப்பு, எம்எஸ், எம்.எஸ்சி, எம்.இ., எம்.டெக், பி.டெக், பிஎஸ்சி, பிஎச்.டி (Post Graduate Degree, MS, M.Sc, ME, M.Tech, BE, B.Tech, B.Sc, Ph.D) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
வயது வரம்பு, தகுதி:
ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (Junior Research Fellow -JRF) பணிக்கு 28 வயது எனவும்,
Scientist / Engineer (SD) பணிக்கு 35 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது முடிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (Junior Research Fellow -JRF) பணிக்கு ரூ.37,000/- முதல் ரூ.42,000/- வரை என்றும்,
விஞ்ஞானி, இன்ஜினியர் (Scientist / Engineer (SD) பணிக்கு ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை என்றும் மாத சம்பளமாக தரப்படும்.
தேர்வு முறை:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த NARL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 16.12.2023 அன்று முதல் 15.01.2024 அன்று வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.narl.gov.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்தப் பணியிடங்களுக்கான விளம்பரங்களைத் தேட
https://www.narl.gov.in/PDFs/AdvtforwebpageJRF2023_1.pdf
https://www.narl.gov.in/PDFs/AdvtforwebpageSD2023.pdf
ஆகிய இணையதள லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












