namakkal Mega Job Fair 2023
நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டு மையம் (நாமக்கல்) இணைந்து நடத்தும், இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

8 ஆயிரம் இடங்களுக்கு ஆட்சேர்ப்பு 2023
எங்கே....!
புதுசத்திரம் பாவை பொறியியல் கல்லூரியில், காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
8 ஆயிரம்?
முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன
பத்தாம் வகுப்பு முதல் பி.இ., வரை
இந்த முகாமில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம்.
சேலம், கோவை, திருவள்ளூர், தென்காசி, திருச்சியை சேர்ந்த நிறுவனங்கள் பங்குபெறும் இந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவர்.
ப்ளீஸ் மறக்காதீங்க...!
நேர்காணல் பிப்ரவரி 18 ஆம் தேதி காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் (Biodata) ஆகியவற்றை நேர்காணலின் போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.
மெகா தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...
https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/152302020011
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/152302020011


Click it and Unblock the Notifications












