மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 120 பணியிடங்கள் உள்ள நிலையில் பி.இ, பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பட்டதாரி பொறியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 120
கல்வித் தகுதி : பி.இ, பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://164.164.122.73/NALCOGET_2020/UploadData/Recuitment_GET_2020_ENG.pdf
இணைய முகவரி : http://164.164.122.73/NALCOGET_2020/
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nalcoindia.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : கேட் ஸ்கோர் (Gate Score 2020), குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 1000
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 500
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nalcoindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












