மத்திய அரசுத் துறையான தேசிய விண்வெளித் துறை ஆய்வகத்தில் (NAL) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்ப அதிகாரி, மூத்த தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 26 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.68 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் :
தேசிய விண்வெளித் துறை ஆய்வகத்தின் (NLA) சார்பில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், Technical Assistant, Technical Officer, Senior Technical Officer I & II பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
NLA வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, Technical Assistant - 19, Technical Officer - 01, Senior Technical Officer I & II - 06 என மொத்தம் 26 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி :
மேற்கண்ட பணியிடத்திற்கு ஒவ்வொரு பதவிக்கும் தனித் தனியே கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ, பிசிஏ, பி.எஸ்சி, பி.இ, பி.டெக் போன்ற துறைகளில் 55 சதவகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
தேசிய விண்வெளித் துறை ஆய்வகத்தின் (NLA) இந்த தொழில்நுட்ப பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 28 வயது நிரப்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம்
என்எல்ஏ-வின் தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்ப அதிகாரி, மூத்த தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 35,400 முதல் அதிகபட்சம் ரூ.67,700 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
NLA-வின் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.nal.res.in/en எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 21.05.2021 (நாளை கடைசி) தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினைக் காணவும். எழுத்து தேர்வானது Paper 1, Paper 2 மற்றும் Paper 3 ஆகிய பிரிவுகளில் நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nal.res.in/medias/content_image/other/1819/all-india-advt-group-iii-3-2021-final-15apr2021.pdf எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளம் அல்லது www.nal.res.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












