மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (NAFED) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் (கணக்கு) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (NAFED)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி மேலாளர் (கணக்கு)
மொத்த காலிப் பணிடங்கள் : 05
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
- CA, IWA அல்லது எம்பிஏ பி.காம் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Preparing budget, Operational Report Statements, Establishing and enforcing proper accounting method, Policies and Principals and Taxation போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், மேற்குறிப்பிட்ட பணியில் 03 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.47,600 முதல் ரூ.1,51,100 ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரியின் மூலம் 28.06.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் : http://14.139.112.106:8888/NAFED2021/NAFEDLogin/login.html
விண்ணப்பக் கட்டணம் : ரூ.1,000
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://vamnicom.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












