ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் NABARD வங்கியில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு (NABARD) வங்கியின் ஆலோசனை சேவைகள் துறையில் (NABCONS) காலியாக உள்ள மூத்த ஆலோசகர் மற்றும் இளநிலை ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் NABARD வங்கியில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி ஆலோசனை சேவைகள் (NABCONS)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மூத்த ஆலோசகர் மற்றும் இளநிலை ஆலோசகர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 22

கல்வித் தகுதி :

மூத்த ஆலோசகர் - முதுநிலைப் பட்டம், எம்பிஏ, Rural Management, Agri Business, Entrepreneurship போன்ற துறைகளில் தேர்ச்சியுடன் 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை ஆலோசகர் - எம்பிஏ, ஐடி, கணினி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

NABCONS வயது வரம்பு :

மூத்த ஆலோசகர் - விண்ணப்பதாரர் 40 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

இளநிலை ஆலோசகர் - விண்ணப்பதாரர் 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

Senior Consultant - இங்கே கிளிக் செய்யவும்.

Junior Consultant - இங்கே கிளிக் செய்யவும்.

ஊதியம்: மாதம் ரூ.40,000 ரூ.1,50,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 29.05.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.05.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nabcons.com/Recruitment.aspx என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NABARD Recruitment 2021: Application invited for Senior Consultant & Junior Consultant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X