NABARD Recruitment 2020: 10-வது தேர்ச்சியா? வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 73 பணியிடங்கள் உள்ள நிலையில் 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

NABARD Recruitment 2020: 10-வது தேர்ச்சியா? வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 73

பணி : அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.12.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ. 10,940 முதல் ரூ.23,700 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஆன்லைன் முதன்மைத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 மற்றும் அறிவிப்பு கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.450 செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் வழியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.nabard.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2412190027Final - Advertisement - Group C -Office Attendant -2019.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NABARD Recruitment 2020: Apply Online for 73 Office Attendant Posts nabard.org
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X