விண்ணப்பம் செய்தவர்களில், விளையாட்டில் தேசிய, மாநில அளவில் சாதனை புரிந்த நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களின் தகுதி, திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். மொத்த காலிப் பணியிடங்களான 54ல் 2 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பணி காலம், ஊதியம் உள்ளிட்ட இன்ன பிற கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
நிர்வாகம் : மும்பை துறைமுக பொறுப்புக் கழகம் (Mumbai Port Authority Sports Club )
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
Ø Sports Trainee Posts
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
பணியிடங்கள் : 54 (2 இடங்கள் பெண்களுக்கு)
கல்வித் தகுதி
துறைமுகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், பொது துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் காலிப் பணியிடங்களில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு தேவையான தகுதியை கொண்டிருக்கும் நபர்கள் தகுதியானவர்கள்.
வயது வரம்பு
ஜூலை 1, 2023 அன்று விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18ம், அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வயது வரம்பில் தளர்வுகள் உள்பட இன்ன பிற விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு முறை கிளிக் செய்யவும்.
ஊதியம்
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு, தகுதி, திறன் அடிப்படையில், மாத ஊதியம் வழங்கப்படும். மேலும், விளையாட்டு உபகரணங்களுக்கான தொகை மற்றும் விபத்து, மருத்துவ காப்பீடு மற்றும் தங்குமிடமும் வழங்கப்படும். முழு விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடவும்.
தேர்வு முறை
விளையாட்டில் சாதனை புரிந்தவர்கள் நேர்காணல் வாயிலாக, தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, அதனுடன் கோரப்பட்ட சான்றுகளுடன் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு, கடைசி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். 26.07.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
JT. GENERAL SECRETARY,
Mumbai Port Authority Sports Club,
2nd Floor, Railway Manager's building,
Ramjibhai Kamani Marg,
Near Vasant Hotel,
Ballard Estate,
Mumbai-400 001,
சலுகைகள், பணி சார்ந்த கூடுதல் விவரங்களுக்கு... கிளிக் ப்ளீஸ்....!
https://mumbaiport.gov.in/index3_n.asp?sslid=1086&subsublinkid=730&langid=1


Click it and Unblock the Notifications












