தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்ட வரும் மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்யும் துறையே தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) ஆகும். தற்போது, தமிழக மருத்துவத் துறையில் உள்ள 1884 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியுடையோர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு நிறுவனம் : தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
துறை : தமிழக அரசு
காலிப் பணியிடம் : 1884
கல்வித் தகுதி : எம்பிபிஎஸ் (Bachelor of Medicine, Bachelor of Surgery)
பணி : உதவியாளர் அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) மற்றும் இதர பிரிவு
ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை
பணியிடம் : தமிழ்நாடு
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.mrb.tn.gov.in
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.750,
- இதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 25.09.2018
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.10.2018
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 17.10.2018
தேர்வு நடைபெறும் நாள் : 09.12.2018
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், http://www.mrb.tn.gov.in/ மற்றும் http://www.mrb.tn.gov.in/pdf/2018/07_MRB_Assistant_Surgeon_2018_Notification.pdf ஆகிய லிங்குகளை கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :-
முறை 1
எம்ஆர்பி தலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mrb.tn.gov.in உள் செல்ல வேண்டும்.
முறை 2
பின், எம்ஆர்பி- தலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள Notification பக்கத்தினை தேர்வு செய்ய வேண்டும்.
முறை 3
அதனுள் "Click here for New Registration" பக்கத்தினை கிளிக் செய்ய வேண்டும்.
முறை 4
அப்பக்கத்தின் தங்களுக்கான விண்ணப்பம் வெளிப்படும். அதனை முழுமையாக படித்து சரியான முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
முறை 5
முழு விபரத்தினையும் பூர்த்தி செய்த பிறகு அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
முறை 6
இறுதியான விண்ணப்பத்தின் பக்கத்தில் உள்ள "Submit" பட்டனை கிளிக் செய்து விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
முறை 7
விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












