தமிழக சுகாதாரத்துறையில் 'பார்மசிஸ்ட் (சித்தா)' பணிக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்து பலன் அடையலாம். கூடுதல் விவரங்களுக்கு mrbonline.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்ய மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) 2012-ல் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் அரசாணை மூலம் உருவாக்கப்பட்டது.

மருத்துவத் துறை பணியாளர்களை தேர்வு செய்வதற்கென்று தனியாக ஒரு தேர்வு வாரியம் அமைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை ஆகும்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஒரு தலைவர், ஒரு உறுப்பினர் , ஒரு உறுப்பினர் செயலர் மற்றும் 19 பணியாளர்களை கொண்டுள்ளது.
இந்த சிறப்புமிகு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்தான் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்துள்ளது. தற்போது தமிழக சுகாதாரத்துறையின் பார்மசிஸ்ட் பிரிவில் 26, இ.இ.ஜி., டெக்னீசியன் பிரிவுகளில் 10 என மொத்தம் 36 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்குக் கல்வித்தகுதியாக பார்மசிஸ்ட் பணிக்கு இந்தியன் சிஸ்டம் ஆப் மெடிசன் / பார்மசி இன் சித்தா / ஒருங்கிணைந்த பார்மசி என ஏதாவது ஒரு பிரிவில் டிப்ளமோ படிப்பும், இ.இ.ஜி., பணிக்கு பிளஸ் 2 அறிவியல் பிரிவும் முடித்திருப்பதும் அவசியமான ஒன்றாக கேட்கப்படுகிறது.
இந்தப் ணியிடங்களுக்கு வயதுத்தகுதியாக 1.7.2023 அடிப்படையில் பொது பிரிவினர் 18 முதல் 32 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
இந்தப் பணியிடங்களுக்குத் தேர்ச்சி முறையாக கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடைபெறும்.
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ. 600 செலுத்தவேண்டும். அதேநேரத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300 செலுத்தவேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் இம்மாதம் 18-ம் தேதியாகும் (18.12.2023)
விண்ணப்பங்கள் டவுன்லோடு செய்தல், பணியிட விவரம், வயதுத்தகுதி போன்ற கூடுதல் விவரங்களுக்கு mrbonline.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












