மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தில் காலியாக உள்ள மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (MOFPI)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 20
பணி : Lead Project Manager, Manager, Financial & Micro Credit Manager, Monitoring & Evaluation Manager, Food Technologist, Communication Manager Consultant, Young Professional
கல்வித் தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித் தனியே கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 32 முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.2,50,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://mofpi.nic.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://mofpi.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












