மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் (MOEF) காலியாக உள்ள Research Officer (Environment) Grade-II பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.42 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MOEF)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Research Officer (Environment) Grade-II
மொத்த காலியிடங்கள் : 07
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Environmental Sciences, Earth Sciences, Botany, Zoology, Chemistry, Bio-Chemistry, Bio-Technology போன்ற பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் அல்லது Environmental Sciences, Biotechnology பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், சுற்றுச்சூழல் சாந்த துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.44,900 முதல் ரூ.1,42,400 மாதம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்https://moef.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://moef.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












