மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து புராஜக்ட் பொசிஷன் (Project Position) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு https://mkuniversity.ac.in//new/Notification 2024/ADVERTISEMENT-TPP-MKU-RUSA-IDAD.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் (Madurai Kamaraj University) இந்தியாவின் தென் தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ளது. இது 1966-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 18 பாடசாலைகளையும் 72 திணைக்களங்களையும் கொண்டுள்ளது. இப்பல்கலைக் கழகமானது 109 இணைக்கப்பட்ட கல்லூரிகளையும் (9 தன்னாட்சி) உடன் அனுமதிபெற்ற 7 மாலைக் கல்லூரிகளையும் கொண்டுள்ளது. தற்போது இந்தப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக நிகர்நிலை குழுவினால் வழங்கப்படும் ஆற்றல்சார் பல்கலைக்கழகத்திற்கான தகுதியைப் பெற்றுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (மதுரைப் பல்கலைக் கழகம் என்று ஆரம்பத்திலிருந்து அறியப் படுகின்றது) இந்தியாவில் சரித்திர முக்கியத்துவமான நகரமான மதுரையில் பண்டைய பாண்டிய அரசனின் தலைநகரில் அமைந்துள்ளது. 1978-ல் மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் காமராஜர் நினைவாக இப்பல்கலைக் கழகமானது மதுரை காமராஜர் பல்கலைக்கழகமாகப் பெயர் மாற்றப்பட்டது.
இத்தகைய பெருமைவாய்ந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்தான் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளன.
புராஜக்ட் பொசிஷன் (Project Position) பணியிடத்துக்கான கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் எம்எஸ்சி, என்இடி, கேட் ( M.Sc / NET / GATE) தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
புராஜக்ட் பொசிஷன் (Project Position) பணியிடத்துக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
புராஜக்ட் பொசிஷன் (Project Position) பணியிடத்துக்கான ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
புராஜக்ட் பொசிஷன் (Project Position) பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வரும் 19-ம் தேதி நடைபெறும் நேர்காணல் (19.01.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.01.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://mkuniversity.ac.in//new/Notification 2024/ADVERTISEMENT-TPP-MKU-RUSA-IDAD.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












