மத்திய அரசிற்கு உட்பட்ட ஜவுளித் அமைச்சகத்தில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.63 ஆயிரம் உதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய ஜவுளி அமைச்சகம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 09
பணி : விண்ணப்பதாரர்கள் நன்றாக வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் மோட்டார் கார்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.63,200 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://texmin.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் ஓட்டுநர் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 07.01.2021
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://texmin.nic.in/ அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












