அமைச்சகத்தில் (Ministry of Jal Shakti) ஜூனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர் (Junior Hindi Translator) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்வளம், நதி மேம்பாடு & கங்கை புத்துயிர் துறையில் (DoWR, RD & GR) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,12,400/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

மத்திய ஜல் சக்தி அமைச்சகம் (Ministry of Jal Shakti) 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையின் போது நீர் ஆராதரங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்பரவு அமைச்சகங்களை ஒன்றிணைத்து புதிய அமைச்சகமாக நிறுவப்பட்டது.கங்கை ஆற்றை தூய்மை செய்யும் நோக்கத்துடன் ஜல்சக்தி அமைச்சகத்துடன் நீர் ஆதாரங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்பரவு அமைச்சகங்கள் ஒன்றிணைக்கப்பட்டது. அண்டை நாடுகளுடன் இந்தியா பகிர்ந்து கொள்ளும் நதிகளுக்கு இடையிலான எந்தவொரு சர்வதேச அல்லது தேசிய மோதல்களையும் இந்த அமைச்சகம் எதிர்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.
கங்கை மற்றும் அதன் துணை நதிகளை சுத்தம் செய்வதற்காக நாட்டின் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக "நமாமி கங்கா" திட்டம் இந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சகத்தில் காலியாகவுள்ள ஜூனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர் பணிக்குத்தான் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 6-ம் தேதி (06.01.2024) கடைசி நாளாகும்.
இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Bachelor's Degree / Master Degree (Hindi / English) தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Pay Matrix Level - 04 / 05 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக அளிக்கப்படும்.
டெபுட்டேஷன் (Deputation) முறைப்படி இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (06.01.2024) தபாலில் அனுப்பித் தரவேண்டும்.
விண்ணப்பம் தொடர்பான தகவல்களை https://fbp.gov.in/rules_pdf/junior_Hinid_Translator.pdf என்ற இந்த இணையதள முகவரியில் காணலாம்.
இந்த வேலை தொடர்பான தகவல்களை https://fbp.gov.in/rules_pdf/FWD_Letter_of_JHT.pdf என்ற இணையதள முகவரியில் பெறலாம்.


Click it and Unblock the Notifications












