மத்திய நிதி அமைச்சகத்தில் (Ministry of Finance) காலியாக உள்ள உதவி பதிவாளர், பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 53 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.10 லட்சம் வகையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய நிதி அமைச்சகம் (Ministry of Finance)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- Registrar - 10
- Assistant Registrar - 17
- Recovery Officer - 26
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
Registrar - இங்கே கிளிக் செய்யவும்.
Recovery Officer - இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
Registrar மற்றும் Assistant Registrar பணிக்கு ஜூன் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Recovery Officer பணிக்கு ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://financialservices.gov.in எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












