மத்திய உள்துறை அமைச்சகத்தில் (MHA) காலியாக உள்ள Field Officer, Mountaineering மற்றும் Consultant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய உள்துறை அமைச்சகம் (MHA)
பணி : Field Officer, Mountaineering மற்றும் Consultant
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி :
Field Officer, Mountaineering - ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று Basic மற்றும் Advance Mountaineering Course முடித்திருக்க வேண்டும்.
Consultant - ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று பி.எச்டி, M.Phil அல்லது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.47,600 முதல் அதிகபட்சம் ரூ.1,51,100 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Field Officer/ Mountaineering
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Consultant
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்ளாகவும், Field Officer/ Mountaineering பணிக்கு 60 நாட்களுக்குள்ளாகவும் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mha.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












