மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள ஆலோசகர், கண்காணிப்பாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணய செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய உள்துறை அமைச்சகம் (MHA)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Law Officer, Chief Supervisor/ Consultant, Supervisor/ Consultant, Sr. Accounts Officer
மொத்த காலிப் பணியிடங்கள் : 15
கல்வித் தகுதி :
மத்திய அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளாக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும், கணினி நன்கு இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.35,000 முதல் ரூ.60,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ceni.del a nfrfia.aov.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.05.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mha.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












