கேரளாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான 'மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்' நிறுவனத்தில் காலியாக உள்ள ரிகர் மற்றும் எலக்ட்ரீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்
மொத்த காலியிடங்கள் : 366
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- ரிகர் - 217
- எலக்ட்ரீசியன் - 149
கல்வித் தகுதி :
- எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ரிகர் என்ஏசி பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் ரிகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் எலக்ட்ரீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 01.07.2019 ஆம் தேதி அடிப்படையில் 18 முதல் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
- பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
- மற்ற பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.07.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் mazagondock.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












