Medical officer recruitment 2023
தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ், சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கம் சார்பில், சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் உள்ள மருத்துவ மையங்களில், ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள மருத்துவ பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க, நாளை(மார்ச்.7) கடைசி நாள் ஆகும்.
நிர்வாகம் : Chennai Greater Chennai Corportation
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
Ø மருத்துவ அலுவலர் (Medical Officer)
Ø ஸ்டாஃப் நர்ஸ் (Staff Nurse)
Ø MPHW / MultiPurpose Health Worker (Health Inspector - Grade II) - Male
Ø உதவியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 560
கடைசி நாள்: 07.03.2023
ஊதியம்
மருத்துவ அலுவலர் - ரூ. 60,000/-
ஸ்டாஃப் நர்ஸ் - ரூ.18,000/-
MPHW / MultiPurpose Health Worker (Health Inspector - Grade II) - Male - ரூ.14,000/-
உதவியாளர் - ரூ.8,500/- வரை மாத ஊதியம் பெறுவர்.
நோட் இட் ப்ளீஸ்....!
Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மருத்துவப் படிப்பில் (M.B.B.S.)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
Staff Nurse பணிக்கு 10+2 என்பதன் அடிப்படையில் உயர்க்கல்வி படித்திருக்க வேண்டும்.
நான்கு ஆண்டுகால பி.எஸ்.சி. நர்ஸிங் படித்திருக்க வேண்டும். மூன்று ஆண்டு காலம் General Nursing மற்றும் Midwife துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
இந்தப் படிப்புகள் நர்ஸிங் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.
MPHW / MultiPurpose Health Worker பணியிடத்திற்கு +2 படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். பத்தாம் வகுப்பில் தமிழ் மொழியை பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், 'Multipurpose Health worker (male) / Health Inspector / Sanitary Inspector course training' படிப்பு முடித்திருக்க வேண்டும்.
உதவி அலுவலர் பணிக்கு எட்டம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மறக்காதீங்க...!
சுய விவர குறிப்புடன், தேவையான அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
பணி 11 மாத கால ஒப்பந்தம் அடிப்படையிலானது. நிரந்தர பணி வாய்ப்பு அல்ல.
பணி தேர்ந்தெடுக்கப்படுவோர் சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் ஒப்பந்ததில் கையெழுத்திட வேண்டும்.
தேர்தெடுக்கப்படுவர்கள் சென்னையில் செயல்படும் சுகாதார மையங்களில் பணியமர்த்தப்படுவர்.
ஒரு மாதத்திற்கு (one month notice) முன்பே அறிவிப்புடன் ஒப்பந்தம் முடித்து கொள்ளப்படும்.
எக்காரணமும் இன்றி ஒப்பந்தத்தை முடித்து கொள்ள சென்னை பெருநகர மாநகராட்சிக்கு அதிகாரம் உண்டு.
என்னென்ன சான்றிதழ்கள்
சுய விவர குறிப்பு
கல்விச் சான்றிதழ்கள்
அனுபவ சான்றிதழ்
Consent Letter
விண்ணப்பிக்க கடைசி தேதி
07.03.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதன் பின் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு நேர்காணல் குறித்த தகவல் தெரிவிக்கப்படும். நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்களுக்கு அதற்கான போக்குவரத்து செலவு, அகவிலைப்படி(Dearness Allowance) வழங்கப்படும்.
முகவரி
The Member Secretary,
Chennai City Urban Health Mission,
Public Health Department, Rippon Buildings,
Chennai - 600 003.
கூடுதல் விபரங்களுக்கு, 044 - 25619330 என்ற எண்ணில் வேலை நேரங்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!
https://chennaicorporation.gov.in/gcc/
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://chennaicorporation.gov.in/gcc/CCUHM1/Notification.pdf


Click it and Unblock the Notifications












