தேவாரப்பாடல் பெற்ற திருத்தலத்தில் வேலை வேணும்?

இந்து மதம், தமிழ்நாட்டைச் சாரந்த நபர்களிடம் இருந்து, ஆகஸ்ட் 18ம் தேதி மாலை 5:45 மணிக்குள் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் துணை ஆணையர் அருணாசலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

நிர்வாகம் : தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (HR&CE)
மேலாண்மை : மாநில அரசு
பணி : வேதபாராயணம், தாளம், உப கோயில் ஓதுவார், உதவி யானை பாகன் உள்ளிட்டவை.
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.08.2022

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலத்தில் வேலை

பணியிடங்கள் / ஊதியம் / கல்வித்தகுதி

· தாளம்-01,

ரூ.18,500-58,600 Pay Matrix Level 22

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 

·வேதபாராயணம் -02

ரூ.15700-50,0001 Pay Matrix Level 16

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப் பள்ளி அல்லது வேத பாட சாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

·உப கோயில் ஓதுவார் - 01

ரூ.12,600-39,900 Pay Matrix Level 13

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரம் பாட சாலையில் அது தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்காக வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

·உதவி பரிசாரகர்-04

ரூ.10,000-31,500 Pay Matrix Level 10

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

· உதவி யானைப் பாகன் -01

ரூ.11,600-36,800 Pay Matrix Level 12

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யானைக்குப் பயிற்சி அளித்து, கட்டுப்படுத்தி, வழி நடத்தும் திறனுடன் யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழியைப் பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

·கருணை இல்லக் காப்பாளர்-01

ரூ.15,900-50,400 Pay Matrix Level 17

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் - 02

ரூ.10,000-31,500 Pay Matrix Level 10

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

· தொழில் நுட்ப உதவியாளர்-01

ரூ.20,600-65,500 Pay Matrix Level 27

கட்டட பொறியலில் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

· ஜெனரேட்டர் ஆப்ரேட்டர்-01 ரூ.16,600-52,400 Pay Matrix Level 18

அரசால்/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட மின்/மின் கம்பிப் பணியாளர்கள் தொழிற்பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இயந்திரத்துறையில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

·பிளம்பர்-01

ரூ.18,000-56,900 Pay Matrix Level 19

அரசால்/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில் , குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும். தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தொடர்புடைய பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவம் அல்லது 2 ஆண்டுகள் தொழில் பழகுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அன்னதானத்திட்டம்

சமையல்காரர்-01

ரூ.13200-41800 Pay Matrix Level 14

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் 2.50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி சமையல்காரர்-01

ரூ.11600-368001 Pay Matrix Level 12

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் உணவு தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

துப்புரவு-01

ரூ.10000-31500| Pay Matrix Level 10

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ü விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றுபவராகவும், தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

ü விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். 35 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும்.

ü கருணை இல்லக் காப்பாளர் பதவிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ü ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.100/-ஐ திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் வரிசை எண் இட்டு வழங்கப்படும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

ü ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேலான பதவிகளுக்கு ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்திருந்தால் அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

ü இதர விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலக வேலை நாட்களில் அலுவலக வேலை நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பணியிடங்கள் தொடர்பான கூடுதல் சந்தேகங்களுக்கு, கோயில் நிர்வாக அலுவலகத்தை தான் நேரடியாக அணுகி தெரிந்து கொள்ள முடியும் என்பதை மறந்துடாதீங்க...!

இதை ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மீனாட்சி அம்மன் திருக்கோயில் அதிகாரப்பூர்வ தளத்துக்கு செல்ல...!

https://hrce.tn.gov.in/hrcehome/hrce_portalpolicy.php?searchcase=termsofuse

https://www.maduraimeenakshi.org/index.php

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
It has been announced to apply for various vacancies in the famous Madurai Arulmiku Sundareswarar temple in Madurai district, known as the 'Thonga city' of Tamil Nadu.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X