ஹாய் மதுரை கைஸ்… உங்களுக்கு மீண்டும் ஒரு குஷி செய்தி…!

ஹாய் மதுரை கைஸ்...! உங்களுக்கு மீண்டும் ஒரு குஷியான வேலைவாய்ப்பு செய்தியை, உங்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அது என்னனு பார்ப்போம்?

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி, ஊராட்சி, மாவட்ட இயக்க மேலாண்மை, வட்டார இயக்க மேலாண்மை ஆகிய அலகில் காலியாக உள்ள 10 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தான் இப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

மதுரைக்காரங்களுக்கு முக்கிய அறிவிப்பு?

நிர்வாகம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை, மதுரை மாவட்டம்

மேலாண்மை: மாநில அரசு

பணி விவரம்

· வட்டார இயக்க மேலாளர்

· வட்டார ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்கள் எண்ணிக்கை: 10

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 16

விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்

வட்டாரம் - பணி விவரம் - காலி எண்ணிக்கை

உசிலம்பட்டி- வட்டார இயக்க - மேலாளர் 1

அலங்காநல்லூர், செல்லம்பட்டி, கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி ஆகிய வட்டாரங்களில், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களில் மொத்தம் 9 என, மொத்தம் 10 இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.

கல்வித் தகுதி

· பட்டப்படிப்பு மற்றும் கணினி படிப்பில் 6 மாத பட்டையபடிப்பு (MS Office) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

· அதிக பட்ச வயது 28க்குள் இருக்க வேண்டும். ஹலோ கைஸ் உள்ளூர் வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

· திட்டம் தொடர்பான பணிகளில், குறைந்தபட்சம் 2 ஆண்டு முன் அனுபவம் இருந்தால் சிறப்பு

கட்டாயம் கவனியுங்க...!

· நிர்ணயிக்கப்பட்ட நாள், நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

· மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் நடைபெற உள்ள எழுத்து தேர்வு விபரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

· தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் அரசு இனச்சுழற்சி விதிமுறைகளின் படி பணியமர்த்தப்படுபவர்.

விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களை https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரியிலிருந்து வெளியாகி இருக்கும் அறிவிப்பாணை பதிவிறக்கம் செய்து கொண்டு அறியலாம்.

கஷ்டப்படுத்துறீங்களே..!

என நீங்க கேட்டது என் காதுக்கு கேட்டுட்டு... அறிவிப்பை 'பிடிஎஃப்' வடிவில் கீழே கொடுத்து இருக்கோம் கைஸ்...! இப்ப கூலா படியுங்க...! அதுவும் கஷ்டம்ங்கனு நினைக்கிற நம்ம ஊர்க்காரங்க உடனே இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் விண்ணப்பம் இருக்கும். அங்கேயே போய் பெற்றுக் கொள்ளுங்க.

ரொம்ப முக்கியம்ங்கோ...

மதுரைக்காரங்களுக்கு முக்கிய அறிவிப்பு?

விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 16.08.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் 'இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, புது நத்தம் ரோடு, ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில், மதுரை' என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

திரும்பவும் நினைவுப்படுத்துறேன் மதுரை கைஸ்... நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

இது ஒப்பந்த முறையில் நியமிக்கப்படும் பணியிடம் என்பதையும் மறக்காதீங்க...!

சீக்கிரம் போய் வேலையை பாருங்க... 'வேக்கன்சி கம்மி' கைஸ்..!

ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

பணி பற்றிய முழு விவரங்கள், மாதிரி விண்ணப்பங்கள் கவனமாக பாருங்க

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/08/2022080283.pdf

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/08/2022080231.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
It has been announced that you can apply for the vacant posts in Madurai District Rural Development, Panchayat, District Operations Management, Local Operations Management.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+